பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் என மத்திய பிரதேச மாநில கட்னி மாவட்டத்தின் பாஜக தலைவர் ராம்ரத்தன் பாயல் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், நாட்டில் கொரோனா மூன்றாவது அலையில் வரவிருக்கும் சூழலில், பெட்ரோல் விலை உயர்வுக்கு குறித்து கேள்வி எழுப்பபடுவதாக குற்றம்சாட்டினார்.
”தாலிபானுக்கு செல்லுங்கள். ஆப்கானிஸ்தானில் தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 50க்கு விற்பனையாகிறது. அங்கு அதை வாங்குவதற்கு கூட ஒருவரும் இல்லை. இங்கே (இந்தியாவில்) குறைந்தபட்சம் எங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. இந்தியா ஏற்கனவே இரண்டு அலைகளை சந்தித்திருக்கிறது. மூன்றாவது அலை வரவிருக்கிறது” என்று அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
महंगाई के सवाल पर कटनी के BJP जिलाध्यक्ष ने कहा-
"अफगानिस्तान चले जाइए वहां पेट्रोल भरवाने वाला कोई भी नहीं है" #MadhyaPradesh #Afganisthan #PetrolDieselPriceHike pic.twitter.com/oYGjVhudkL
— News24 (@news24tvchannel) August 19, 2021
மேலும், “நீங்கள் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். நாடு எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் உணந்தீர்களா?. கொரோணா பேரிடர் நிலைமையை பிரதமர் மோடி சரியாக கட்டுப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் பொருட்களை வழங்குகிறார். யாராவது கொடுக்க முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் கொரோனா நிலை குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரும் முககவசம் அணியவோ, சமூக இடைவெளி கடைபிடிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.