Aran Sei

கார்ப்பரேட்களின் கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டுங்கள் எளிய மக்களிடம் அல்ல – பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

credits : the hindu

சில ஆயிரம் கடன் பெற்ற சிறிய கடனாளிகளிடம் பின்னால் செல்வதற்கு பதிலாக ‘பெரிய கார்பரேட் கடனாளிகள்’ மீது கவனம் செலுத்துங்கள் என பொதுத்துறை வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கனரா வங்கி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர்.ஷா

”செயல்படாத சொத்துக்கள் குறித்து பொதுத்துறை நிறுவனங்கள் உண்மையில் கவலைப்படுமேயானால், பெரிய கடனாளிகள்மீது கவனம் செலுத்த வேண்டும்… சிறிய கடன்கள்மீது அல்ல” என கனரா வங்கியிடம் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கடன் தவனைகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு 90 நாட்களுக்குப் பிறகு வரை திருப்பிச் செலுத்தப்படாத பட்சத்தில், அவை செயல்படாத சொத்துக்களாக வகைப்படுத்தப்பட்டுவிடுகிறது. இதனால் கடனாளிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை”என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பின் வழியாக 1540 தனிநபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ. 48.5 லட்சம் கடனை வசூலிப்பதற்காக கனரா வங்கியின் முயற்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கடனாளிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சட்தில், கடன் தொகையைச் சமூக சேவை அமைப்பின் வைப்பு தொகையில் இருந்து திரும்ப பெறுவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை அதனால் இந்த முயற்சியை மேற்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

கனரா வங்கி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துருவ் மேத்தா, “கடனாளிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாதபட்சத்தில், கடன் தொகைக்கு நாங்கள் பொறுப்பு என சமூக சேவை அமைப்பு உறுதியளித்தன் அடிப்படையிலேயே, கடன் வழங்கப்பட்டது” என தெரிவித்தார்.

”கடன் பெற்றவர் சிறு அளவில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கைவினை தொழில் போன்ற சிறு தொழில் செய்து வருபவர்கள். அவர்கள் விளிம்பு நிலை மக்கள்… அவர்களில் பெரும்பாலானவர்கள் கடன் விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட வேண்டிய புகைப்படத்திற்கு 10 ரூபாய் கூட இல்லாதவர்கள். இவர்களை அடையாளம் காண உதவும் பணியை மட்டுமே சமூக சேவை அமைப்பு செய்தது. இதில் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், சமூகத்தின் சில பிரிவினருக்கு கடன் வழங்குவது பொருளாதார செயல்பாடும் மட்டுமல்ல, சமூக செயல்பாடும் தான். உங்களுக்குத் தார்மீக பொறுப்பு இருக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்ற அமர்வு ”நீங்கள் இது போன்ற மக்களுக்குப் பின்னால் செல்லக் கூடாது. நீங்கள் பெரிய கடனாளிகள் பின்னால் செல்ல வேண்டும். இது போன்ற் அமைப்பிற்கு எதிராக கனரா வங்கி மேல்முறையீடு செய்யக் கூடாது” என கூறியுள்ளது.

Source : Hindustan Times

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்