அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி அர்த்தத்தோடு கொண்டாடும் வகையில் பல சமூகநலத்திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் https://www.aibeainfo.in/ என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தலாம்.
மேலும், பயிற்சி வகுப்புகளுக்குப் பணம் செலுத்த இயலாத திறன்மிக்க கல்லூரி மாணவர்கள் ஐ.பி.பி.எஸ்/வங்கித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் வகையிலும் இணையத்தளத்தில் மாதிரித் தேர்வு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தேர்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்கள் இலவசமாக போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறலாம் என்றும் அகில இந்தியா வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.