Aran Sei

‘ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறை’ – ஐநா பிரதிநிதி கண்டனம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கான ஐநா சிறப்பு பிரதிநிதி மக்கள் அனைவரும் உச்சபச்ச அக்கறைக் கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

இதுகுறித்து 6௦ நாட்களுக்குள்  பதிலளிக்க வேண்டுமென கடந்த ஜூன் 3 அன்று  ஒன்றிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடிதம் எழுதி இருந்தது. ஆனால், அதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க தவறிய நிலையில்,  தற்போது தகவல் அறிக்கை இணையதளத்தின் வழியாக அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் காஷ்மீரைச் சேர்ந்த  பத்திரிக்கையாளர்கள் ஃபஹத் ஷா, காஜி ஷிப்லி, சஜாத் குல், ஆக்கிப் ஜாவீத் ஆகியோர் தாக்கப்பட்டது குறித்தும், காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்,  தி காஷ்மீர் வாலா பத்திரிக்கையின் மீது எண்ணற்ற முதல் தகவல்  அறிக்கைப் பதியப்பட்டு, அதன் ஆசிரியர் பஹத் ஷாவுக்கு பலதடவை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியதை குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதே போன்று, அந்தக் கடிதத்தில் ஜம்மு காஷ்மீர்  காவல்துறையினர்  பத்திரிகையாளர்  ஜாவீத்தை தாக்கினார்கள் என்றும்,  அவரது சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தை மறுக்கும் வகையில் அவரது எலக்ட்ரானிக் சாதனங்களை ஆணை இன்றி  பறிமுதல் செய்தனர் என்றும் கூறியுள்ளது.  பத்திரிகையாளர் ஜாவீத்,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த இளம் சமூகவலைதள பயனர்கள் மோடியை ட்வீட்டரில் விமர்சித்தது  குறித்து அம்மாநில காவல்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரித்தது குறித்து செய்தி வெளியிட்டு வந்தார்.

இது போன்றொதொரு கடிதத்தை ஐக்கிய நாடுகளவை எழுதுவது இது முதல்முறையல்ல. கடந்தாண்டு ஜூலை மாதம்  கூட  ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்குறித்து “மிகுந்த அக்கறைகொள்ள வேண்டிய விஷயம்” என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாது, முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதியான டேவிட் கேய், பத்திரிகையாளர்கள் நசீர் கணாய், கோஹர் கிலானி, பீர்சாடா ஆஷிக் மற்றும் மஸ்ரத் ஜஹ்ரா மீதான தணிக்கைக்கும் , அவர்ள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு  எதிராகவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜூலையில்  அனுப்பப்பட்ட கடிதம் குறித்து ஒன்றிய அரசு  பதிலளிக்காத  நிலையில் , இது குறித்த தகவலை   பொது வெளியில் வெளியிட்டுள்ளது.

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்