Aran Sei

“தெற்காசிய நாடுகளில் பாலின சமத்துவமின்மையை சரிசெய்ய 195 ஆண்டுகள் ஆகும்” – பன்னாட்டு பொருளாதார குழுமம் அறிக்கை

லகளவில் 156 நாடுகளில் எடுக்கப்பட்ட பாலின இடைவெளிகுறித்து ஆய்வு முடிவில் இந்தியா 140வது இடத்தில் உள்ளதாகப் பன்னாட்டு பொருளாதார குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பன்னாட்டு பொருளாதார குழுமம்(World Economic Forum)என்ற அமைப்பு பாலின சமத்துவமின்மையால் உருவாகும் பாலின இடைவெளிக்குறித்து இந்த ஆய்வை நடந்தியிருக்கிறது. பொருளாதார பங்களிப்பு மற்றும் அதன் வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம், மருத்துவம், அரசியல் பங்களிப்புகுறித்து இந்த ஆய்வு கவனம் செலுத்தி இருக்கிறது.

‘பாலின சமத்துவமின்மையை அனுமதிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ – தேசிய பாதுகாப்பு தேர்வில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்சநீதி மன்றம் கருத்து

பாலின விகிதம் மற்றும் பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பாலின இடைவெளி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவின் படி கணக்கிடப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா 0.625 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும், கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவின் அடிப்படையில் 28 இடங்கள் பின்னடைவை சந்தித்து தற்போது 140 வது இடத்தில் உள்ளது.

ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

இதே போலப் பொருளாதார பங்களிப்பு மற்றும் அதன் வாய்ப்புகளில் நிலவும் பாலின இடைவெளியில் இந்தியா 151 வது இடத்திலும், கல்வியில் 114 வது இடத்திலும் உள்ளது.

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் மிகமோசமாக 155 வது இடத்தில் உள்ளது, இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் நிலவும் பாலின விகிதம் மற்றும் பொருளாதார பங்காளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் பங்களிப்பில் உலகளவில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.

“இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை ” – மீனா கந்தசாமி

உலகளவில் பாலின இடைவெளி இடைவெளியைச் சரிசெய்ய 135.6 ஆண்டுகள் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலகெங்கிலும் உள்ள ஏறத்தாழ 35,500 நாடளுமன்ற உறுப்பினர்களில் 26.1% பெண் உறுப்பினர்கள் என்றும், அதில் 9.1 % மட்டுமே பெண்கள் அமைச்சர்களாக உள்ளார்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் வங்கதேசத்தில் மட்டுமே ஆண்களை விட பெண்கள் உயர் அரசியல் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

இந்தியாவில் சாரிசாரியாக ஒரு ஆண் பெறும் ஊதியத்தில் ஐந்தில் 1 மடங்கை மட்டுமே பெண்கள் ஊதியமாகப் பெற்றுவருகிறார்கள் என்றும் பன்னாட்டு பொருளாதார குழுத்தின் அறிக்கை கூறுகிறது.

மேலும், பன்னாட்டு பொருளாதார குழுத்தின் அறிக்கையின் படி,பாலின சமத்துவமின்மையால் நிலவும் பாலின இடைவெளியைச் சரிசெய்ய தெற்கு ஆசியாவுக்கு 195.4 ஆண்டுகள் ஆகும்.

SOURCE : Global GenderGap Report 2021,World Economic Forum

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்