Aran Sei

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கடிதம்

Credit: The Wire

டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு உலகளாவிய மனித உரிமை மற்றும் கல்வி அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மருத்துவ நிலைமை அந்த கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அந்த கடிதத்தில் கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ள கடிதத்தில், “சாய்பாபாவின் உடல் 90 விழுக்காடு வரை செயல் இழந்துவிட்டது. இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது நாக்பூரில் உள்ள தனிமைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டைப் படிப்படியாக இழந்து வருகிறார்.” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறை அறையிலிருந்து சிசிடிவி கேமராவை அகற்ற வேண்டும்: பேரா. சாய்பாபா உண்ணாவிரத போராட்டம்

அவரது ஆயுள் தண்டனை தற்போது மரணத் தண்டனையாக மாறி வருகிறது என்று கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கில், கைது செய்யப்பட்டு தலோஜா சிறையில் அடைப்பட்டிருந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி, கடந்த ஜூலை உயிரிழந்ததை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

மருத்துவ காரணங்களுக்காக பிணை கோரி காத்திருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஸ்டான் சுவாமி உயிரிழந்தார்.

சிறையிலிருக்கும் பேரா. சாய்பாபாவுக்கு கொரோனா – மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மனைவி வேண்டுகோள்

நீதிமன்ற காவலில் உயிரிழந்த ஸ்டான் சுவாமியின் நிலைமை ஜி.என். சாய்பாபாவிற்கு வராமல் இருக்க உடனடியாக நீங்கள் முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் எதிர்ப்பை மௌனமாக்குவதற்கு சிறைவாசம் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், பக்கசார்புடைய அரசியல் அமைப்பால், ஜி.என். சாய்பாபாவின் நியாயமான விசாரணை மறுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜி.என். சாய்பாபா மரணத்தின் விளிம்பில் இருக்கும் நிலையில், “அவரது பரோல் மூன்று முறை நிராகரிப்பட்டுள்ளது மற்றும் அவரது மருத்துவ பிணை மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. நீங்கள் (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி)  தலையிட்டு ஜி.என். சாய்பாபாவுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக தனிமை சிறையில் இருந்து சக்கர நாற்காலி அணுகக்கூடிய சிறை அறைக்கு மாற்ற வேண்டும். பின்னர் அவருக்கு மருத்துவ பிணை வழங்கி, சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையில் சேர அனுமதிக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதியை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சாய்பாபா பணி நீக்கம் – மறுபரிசீலனை செய்யவேண்டுமென பேராசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்

மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜி.என். சாய்பாபாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கி கட்ச்ரோலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

Source: The Wire

இந்திய ராணுவமா? RSS ராணுவமா? பகீர் பின்னணியை அம்பலப்படுத்தும் Sasikanth Senthil | Agnipath | Army

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்