Aran Sei

ஸ்காட்லாந்தில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்கள் – எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடியதால் விடுவிப்பு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வசித்து வரும் இரண்டு இந்தியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளாஸ்கோவின் தென்பகுதியில் உள்ள கென்முரே சாலையில் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களைக் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.

”குடியுரிமை குற்றங்களில் ஈடுபட்டவர்கள்” என சந்தேகிக்கப்படுவதால்,  அவர்கள் கைது செய்யப்பட்டதாக, உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “எங்கள் அண்டை வீட்டாரை வெளியில் விடுங்கள்” என கோஷங்கள் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புலம்பெயர் தொழிலாளர்களிடம் அடையாள அட்டை கேட்பதை விடுத்து, அவர்களுக்கு உணவு அளியுங்கள்’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”கைது செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களை விடுவிக்கக் கோரி, கிளாஸ்கோவின் கென்முரே சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வை பாதுக்காக்கும் பொருட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் இருவரை விடுதலை செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியிலிருந்து மக்கள் விரைந்து கலைந்து செல்ல வேண்டும். அவ்வாறு கலைந்து செல்லும்போது அந்தப் பகுதி அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது.

‘கொரோனா கிருமி ஒரு உயிர்; நம்மை போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு’ – உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கருத்து

உள்துறை அலுவலக குடியேற்ற கொள்கைகளுடன் உடன்படவில்லை என தெரிவித்துள்ள, ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன், ”இஸ்லாமியர்களின் கொண்டாட்ட நாளில், அந்தச் சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா பரவல் இருக்கும் சமயத்தில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆபத்து ஏற்பட வாய்ப்பாகிவிட்டது” என குறிப்பிட்டார்.

இது போன்ற ஆபத்தான சூழ்நிலையை அவர்கள் மீண்டும் உருவாக்கமாட்டார்கள் என்ற இங்கிலாந்து அரசாங்கத்திடம் ”உத்திரவாதம் கோரிவேன்” என அவர் கூறினார்.

Source : BBC

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்