Aran Sei

‘பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது தேச நலனுக்கு எதிரானது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்  கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய  முதலமைசர் “பொதுத்துறை நிறுவனங்கள் என்பது நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமான சொத்து” என்று தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு, குறு தொழிலுக்கும் ஆணிவேராக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள்தான்”  என்று கூறிய அவர், “பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. இம்முடிவைத் தமிழ்நாடு  கடுமையாக எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிடக் கோரி பிரதமருக்குக் கடிதம் தெரிவித்த ஸ்டாலின், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொதுச் சொத்துகளை விற்பனை செய்வதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு நல்லதல்ல” என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்