Aran Sei

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி – பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஒரு சமூக அநீதி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த (EWS) பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை அரசு கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

“சமூகநீதி தளத்தில் தமிழகம் எப்போதும் ஒரு படி முன்னணியில் இருக்கும் தமிழகத்தில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுப்பிய வலுவான கோரிக்கைகளின் அடிப்படையில் இன்றைக்கு ஒன்றிய அரசு பிற்பட்டோர் காண இட ஒதுக்கீடு 27% என்பதை அறிவித்திருக்கிறது. இருப்பினும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு பெறும் வரை நமது போராட்டம் ஒயக் கூடாது” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோர்.

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு எதிர்வினை வந்துவிடக் கூடாது என்பதற்காக பிற்பட்டோர் கான இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்கிற ஐயப்பாடு எழுவதாக கூறியுள்ளார்.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் இருக்கின்ற நிலையில் இந்திய அளவில் வெறும் 27 சதவீதம் மட்டும் வழங்கி மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு எந்தவிதமான சமுதாய புள்ளிவிபர கணக்கெடுப்புகள் இல்லாமல் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது சமூக நீதி சிந்தனையின் அடிப்படை கோட்பாட்டையே சிதைப்பது போன்று உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரநிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பொய்கள் நிறைந்த பிரதமர் மோடியின் உரை – உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

ஒன்றிய அரசு பிற்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டுமென்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்