Aran Sei

ராஜஸ்தானில் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – 22 நாட்களுக்குப் பின் மீட்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டம் பொக்ரான் பகுதியில் தூரத்து உறவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 16 வயது சிறுமி 22 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக தி இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

இந்தச் சம்பவத்தில் சிறுமியைக் கடத்திய தூரத்து உறவினர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும், மீட்கப்பட்ட பெண் சிறார் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளிமீது போக்ஸோ சட்டம் உட்பட பல சட்ட பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், மேற்கொண்டு விசாரணைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் தி இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

இதுகுறித்து தெரிவித்துள்ள இட்டவா பகுதியின் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஜய் ஷங்கர் சர்மா, கடந்த மார்ச் 4 அன்று பொக்ரான் பகுதியிலிருந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டகாகவும், தொடர்ந்து பல முறை வன்புணரப்பட்டிருக்கிறார் என்றும், கட்டாயப்படுத்தி கட்டிட வேளையில் ஈடுபடுத்தபட்டார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம்குறித்து பேசிய கோட்டா பகுதியின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் கனிஸ் பாத்திமா “அந்தச் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்” என்றும் கூறியுள்ளதாகத் தி இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்