Aran Sei

கியாம்பூ காடுகளும் ஜிம் கார்பெட்டின் பேத்தியும் – நில உரிமைக்காக கொல்லப்பட்ட போராளி

கென்யாவின் தலைநகரான நைரோபியை ஒட்டி அமைந்துள்ளது கியாம்பூ காடு. கென்யாவின் பொருளாதாரம் இந்த இயற்கை வளங்களை நம்பித்தான் உள்ளது. நைரோபியில் நிலத்தின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது, கியாம்பூ காடுகள் ரியல் எஸ்டேட் மாபியாக்கள் கண்களை உறுத்த ஆரம்பித்தன. அந்தக் காடுகளுக்குள் இருந்த பல்லுயிரியம் மிகவும் தனித்துவமானது, பல்வேறு சதுப்பு நிலங்களும் இருந்தன.

நிலத்தின் விலை எகிற ஆரம்பித்தவுடன் சதுப்புநிலங்களை பிளாட்டுகளாக மாற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் துடித்தன. அதை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார் ஜோனாஹ் ஸ்டட்ச்பரி, இவர் புகழ் பெற்ற வனஉயிர் பாதுகாவலர் ஜிம் கார்பெட்டின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. கியாம்பூ காடுகளில் எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்க கூடாது என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் அதனால் சக்தி வாய்ந்த ரியல் எஸ்டேட் லாபிக்கு எதிரியானார். தொடர்ச்சியாக பல்வேறு மிரட்டல்கள் ஜோனாஹ்விற்கு வந்தவண்ணம் இருந்தன.

‘இட ஒதுக்கீடு உரிமை மாநிலங்களுக்கே’: நாடாளுமன்றத்தில் எழுப்ப மகாராஸ்ட்ரா அரசு திட்டம்

எந்தவிதமான மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை முன்னெடுத்துவந்த ஜோனாஹ் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவருடைய வீட்டிற்கு அருகாமையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வெளியே சென்று திரும்பிவந்து கொண்டிருந்தவர் வீட்டிற்கு அருகாமையில் சாலையை மறித்து சில மரக்கிளைகள் கிளைகள் விழுந்திருந்தால் அவற்றை விலக்கிவிட கீழே இறங்கியவர் மீது சரமாரியாக குண்டுமழை சுட்டு விட்டுத் தப்பியுள்ளார் கொலையாளிகள். அவருடைய வீட்டிற்கு அருகாமையிலேயே நடைபெற்ற இந்தத் துயர சம்பவம் கென்யாவை உலுக்கியுள்ளது.

பாஜக ஆட்சியில் சத்திஸ்கர் வந்த பெகசிஸ் நிறுவனத்தினர் – முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல் தகவல்

“கடந்த பல ஆண்டுகளாக கியாம்பூ காடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றி நம் நாட்டின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளத்தையும் பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்ந்தார் ஜோனாஹ், அவருடைய படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார் அந்நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா. ஜோனாஹ்வின் படுகொலை கென்யாவில் செயல்படும் காட்டுயிர் பாதுகாவலர்களை அதிர்ச்சியில் ஆளாகியுள்ளது என்கிறார் வைல்ட்லைப் டிரெக்ட் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவனத்தின் பவுலா கஹும்பு.

கடந்த பல ஆண்டுகளாக கென்யாவில் காட்டுயிர் பாதுகாவலர்கள், இயற்கை வள பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் என பலரும் கொல்லப்பட்டுவருகிறார்கள், அதன் தொடர்ச்சியே ஜோனாஹ்வின் படுகொலை. 2018 ஆம் ஆண்டு, யானைகள் மற்றும் காண்டாமிருகங்களின் தந்தங்கள் கடத்தப்படுவது தொடர்பாக துப்பறிந்து வெளிக்கொண்டுவந்த எஸ்மோண்ட் பிராட்லி கொல்லப்பட்டார், அவருடைய மரணத்தின் புதிரும் அவிழ்க்கப்படாமல் உள்ளது. இதைப் போன்று பல்வேறு கொலைகளில் இன்னமும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

உலகம் முழுவதும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் கொல்லப்படுவது அதிகரிக்கிறது. வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும் என்று பல்வேறு பூர்வகுடிகள் நிரூபித்துள்ள நிலையில், வளங்களைக் கைப்பற்றுவதற்கான செயல்களைப் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு பெருமுதலாளிகளும் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் வளங்களை அரிதாக்குகிறது, அதனால் தகராறுகள் அதிகரிக்கும். சூழலியல் செயல்பாட்டாளர்களை பாதுகாப்பது நம்முடைய வளங்களைப் பாதுகாப்பது ஆகும், இதை நினைவில் கொண்டு நாம் செயல்படுவோம்.

 

பூவுலகின் நண்பர்கள் இணையளத்தில் வெளியான கட்டுரை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்