Aran Sei

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 தலைவர்களைக் கொண்ட ஜி-23 குழுவானது சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சித் தலைவர் தேர்தல், கட்சியின் நாடாளுமன்ற வாரியத்திற்கான தேர்தல், காங்கிரஸ் செயற்க்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உள்ளிட்ட கட்சியின் அமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்தனர். குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்குழுவில் உள்ளனர்.

இந்த ஜி-23 குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சியானது, கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் தோல்வியைச் சந்தித்தது.

இத்தோல்விகள் குறித்து ஜி-23 தலைவர்களிடையே மீண்டும் அதிர்ப்தி உருவானது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 18), சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ள குலாம் நபி ஆசாத், “சோனியா காந்தியுடனான சந்திப்பு நன்றாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவர் தலைவராகத் தொடர வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டது. யாரும் அவரை பதவி விலகும்படி கோரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘நேரு குடும்பத்தினர் கட்சி தலைமையை மற்றவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும்’ –காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

“கட்சியை வலுப்படுத்த கட்சியின் தலைவர்களை சோனியா காந்தி தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவ்வகையில், இந்த சந்திப்பில் நாங்கள் சில ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடுவது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்