Aran Sei

போராடிய 200 மீது முதல் தகவல் அறிக்கை பதிவு – போராட்டத்தை சாதி ரீதியாக பாஜக மாற்ற முயல்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

காசிப்பூர் பகுதியில் பாஜகவினருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விவசாய சங்கத்தைச் சார்ந்த 200 பேர்மீது, அப்பகுதி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கபட்ட பாஜகவின் அம்மாநில பொதுச் செயலாளர் அமித் வால்மீகியின் வரவேற்புக் கூட்டத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாடெங்கும் உள்ள 22% பள்ளிகளில் மட்டுமே இணையவசதி உள்ளது – ஆன்லைன் வகுப்புகளின் நிலை என்ன?

இந்நிலையில், அமித் வால்மீகி அளித்த புகாரின் பெயரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147, 148, 223, 352, 427 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பாரதிய கிசான் சங்கத்தைச் சார்ந்த அடையாளம் காணப்படாத 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அமித் வால்மீகி, விவசாயிகள் வாகனங்களைத் தாக்கியதோடு அல்லாமல், சாதி ரீதியாக திட்டியதாக கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் கூறியுள்ள விவசாயிகள் சங்கத்தின் ஊடக தொடர்பாளர் தர்மேந்திரா மாலிக், “பாஜக இந்தப் பிரச்னையை சாதி ரீதியாக மாற்ற முயல்கிறது. ஆனால் வால்மீகி சாதியினர் பெருந்திரளாக வந்து போரட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்