Aran Sei

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப காவல்துறை திட்டம்

Image Credit : time.com

காசியாபாத் பகுதியில் வயதான முஸ்லீம் ஒருவர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட வேண்டுமெனக்கூறி தாக்கப்பட்டதாக வெளியான காணொளி தொடர்பாக அப்பகுதி காவல்துறை ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு மற்றொரு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புற) ஈராஜ் ராஜா நேற்றைய தினம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட காணொளி வெளியான சம்பவம் – ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு உத்திரபிரதேச காவல்துறை நோட்டீஸ்

மேலும், இந்த காணொளியை பகிர்ந்ததற்காகவும், சமூக அமைதியை சிதைக்க முயன்றதாகக் கூறி ட்விட்டர் மற்றும் பல பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரியை, ஒரு வாரத்திற்குள் லோனி பார்டர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறுகடந்த ஜூன் 17 அன்று நோட்டீஸ் அனுப்பியிருந்தாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறை,”நாங்கள் இன்று [திங்கள்] அல்லது நாளை [செவ்வாய்க்கிழமை] மற்றொரு நோட்டீசை அனுப்புவோம்,” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

இந்நிலையில், ட்விட்டர் இந்தியாவின் கொள்கை தகவல்தொடர்புத் தலைவர் பல்லவி வாலியாவிடம், நோட்டீஸ் மற்றும் அதற்கான பதில்குறித்து கேட்டபோது “பகிர்ந்து கொள்ள எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை” என்றும், எப்போது அழைக்கிறார்களோ அப்போது பதிலளிப்போம் என்று கூறியுள்ளதாகவும் தி இந்து  செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்