காசியாபாத்தில் கோவில் அருகே அமர்ந்து அசைவ உணவு உண்டதாக சந்தேகிக்கப்பட்டு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பிரவீன் சைனி மற்றும் அவரது நண்பர்கள் தேவேந்திரா, வினோத் ஆகியோர் கங்காநகர் காட் பகுதியில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்தனர். இப்போது அங்கு வந்த நிதின், ஆகாஷ், அஸ்வினி என்ற மூன்று இளைஞர்கள், இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியதில் பிரவீன் சைனி உயிரிழந்துள்ளார்.
அசைவு உணவு சாப்பிட்டதன் சந்தேகத்தின் பெயரில் தான் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற காரணத்தை மறுக்கும் காவல்துறையினர், “குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் மது அருந்தியிருந்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தடி மற்றும் குச்சிகளை கொண்டு தாக்கியதில் பிரவீன் உயிரிழந்துள்ளார்” என சதார் வட்ட காவல்துறை அதிகாரி கமலேஷ் நாராயணன் பாண்டே தெரிவித்துள்ளார்.
”பாதிக்கப்பட்டவர்கள் மூவரும் ரொட்டியும் சோயாவும் சாப்பிட்டனர், அசைவ உணவு உண்ணவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இவர்களை அணுகியபோது, இவர்களின் உணவு பொட்டலக்களை காட்டி சைவ உணவு சாப்பிடுவதாக கூறினர்” என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
”உணவகத்தின் ரசீதில் தெளிவாக உள்ளது, அவர்கள் ரொட்டியுடன் சோயா மற்றும் வெங்காயம் வாங்கியுள்ளனர். தாக்குதலுக்கு முன்பாக இரு குழுக்களும் அரை மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் உள்ளன” என கமலேஷ் பாண்டே கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது குறித்த வாதம் இல்லை எனக் கூறிய காசியாபாத் காவல் கண்காணிப்பாளர் இராஜ் ராஜா, “அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது தொடர்பாக மோதல் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குற்றம்சாப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களால் பரிசோதிக்கப்பட்டனர். இதன் காரணமாக வன்முறை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தான் முதலில் தாக்கியுள்ளனர், இதற்குப் பதிலடி கொடுத்ததால் தாக்குதல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
”ராணுவத்தில் பணிபுரியும் முக்கிய குற்றவாளியான நிதின் விடுப்பில் வந்துள்ளபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவருடன் அவரது நண்பர்கள் ஆகாஷ் மற்றும் அஸ்வினி இருந்துள்ளனர். சம்பவத்திற்கு பிறகு மூவரும் ஸ்கூட்டரில் ஏறிச் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்” என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பிரவீன் சாய்னி மீரட்டை சேர்ந்தவர் என்றும், அவர் கோயில் மற்றும் அதன் அருகில் இருந்த் கடைகளில் பணிபுரிந்து வந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.