Aran Sei

தன்பாலின திருமணங்களுக்கு ஆதரவு – வாடிகனின் நிலைபாட்டை மீறி, ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபைகள் அறிவிப்பு

ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், தன்பாலினத்தவர்களின் திருமணங்களை ஆதரித்து ஆசிர்வாதம் வழங்குவதாக அறிவித்துள்ளன.

தன்பாலினத்தவர் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க இயலாது – வாடிகன் தேவாலயம்

வாடிகன் தேவாலயம், தன்பாலினத்தவர்களின் திருமணங்களை அங்கீகரிக்க இயலாது என்று அறிவித்ததற்கு எதிராக, ஜெர்மன் தேவாலயங்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

பாதிரியார்கள் மற்றும் தன்னார்வலர்களால், ‘அன்பு வெல்லட்டும்’ என்ற குறிக்கோளோடு கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்திலும், 100 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் கையெழுத்திட்டுள்ளன.

பாலியல் தொந்தரவு செய்யும் பாதிரியார்களைக் காப்பாற்றும் வாடிகன்

இதுகுறித்து இந்த திட்டத்தை முன்னெடுத்தவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “அன்பினால் உறவுகளாக தங்களை பிணைத்து கொள்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், அவர்களை ஆசிர்வதிக்கிறோம்; அவர்களுக்காக எங்கள் குரலை உயர்த்துவோம் என்று கூறிக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனியர்கள் பலி

கடந்த மார்ச் மாதம், தேவாலயங்களின் கோட்பாட்டைப் பாதுகாக்கும் பொறுப்புடைய வாடிகன் அலுவலகமான, விசுவாசக் கோட்பாட்டிற்கான சபை (சி.டி.எஃப்),  தன்பாலினத்தவர்களின் திருமணங்களை ஆசிர்வதிக்க இயலாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: AFP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்