Aran Sei

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

மெரிக்காவின் நிறவெறித் தாக்குதலால் உயிரிழந்த கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, 46 வயதான கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கள்ள நோட்டை பயன்படுத்தியதாக , மினியபோலீசின் காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணையின்போது வெள்ளை இன மூன்று காவலர்கள் பிளாய்டின் கால்களை பிடித்துக் கொள்ள, மற்றொரு காவல் அதிகாரியான டெரிக் சாவின் தன்னுடையை கால் முட்டியால் பிளாய்ட்டின் கழுத்தை (தொடர்ந்து ஒன்பது நிமிடங்கள்) நெறித்ததில், ஜார்ஜ் பிளாய்ட் மூச்சு விட இயலாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தார்.

அந்தச் சம்பவத்தின்போது, காவல்துறை அதிகாரியிடம் ”மூச்சு விட முடியவில்லை” என ஜார்க் பிளாய்ட் கெஞ்சும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

டொனால்ட் டிரம்ப் – உள்நாட்டு கலகத்தை மூட்டும் அதிபர்

இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்திற்காகவும், அமேரிக்காவில் நிலவும் நிறவெறிக்கு எதிராகவும் சர்வதேச அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர், மினியபோலீஸ் மாநகரம் இழப்பீடு தரக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், டெரிக் சாவினும் மூன்று காவலர்களும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் கமென்டரியில் ஆர்ஜே பாலாஜியின் வக்கிரம் – பா.பிரேம்

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையில் 36 கோடி ரூபாயை ஜார்ஜ் பிளாய்டுக்காக குரல் எழுப்பிய மினியபோலீஸ் மக்களுக்கு வழங்குவதாக பிளாய்ட் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி-ல் இனவெறி: மனநோயாளியான பத்திரிகையாளர்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞர் பெஞ்சமின் கரம்ப், ”இந்த இழப்பீட்டு தொகை, காவல்துறையால் பலியாகும் கறுப்பினத்தவரின் மரணங்கள், இனி அற்பமானதாகவோ, கேட்பாரற்றோ கடந்து போய் விடாது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனத்திற்கு அரசின் பங்குகளை விற்க மத்தியஅரசு முடிவு – 16.12% பங்குகள் விற்பனை

ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி, பிரிட்ஜெட் பிளாய்ட் பேசுகையில், இந்தச் சங்கடமான பயணத்தில் என் சகோதரன் ஜார்ஜ் பிளாய்டு மரணத்துக்கான நீதி கிடைத்துள்ளது. எங்களுடைய இதயங்கள் நொறுங்கியிருந்தாலும், ஜார்ஜ் பிளாய்ட் தன்னுடைய மரணத்திலும் கூட உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு – செயற்கை கருத்தரிப்பு முறையே காரணம் என ஆய்வில் தகவல்

மினியபோலீசின் மேயரான ஜேக்கப் பிரே, ”இந்த இழப்பீட்டு தொகை நிறவெறிக்கு எதிரான நீதியை வழங்குவதில், மினியபோலீஸ் மாநகரத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது” என்று  செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.

வாரணாசி ஞானாபி மசூதியை அகற்றக் கோரி மனு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜார்ஜ் பிளாய்ட்டை தனது கால் முட்டியால் கழுத்தை நெறித்துக் கொலை செய்த டெரிக் சாவின், காவல்துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தான் குற்றம் செய்யவில்லை என்றும் காவல்துறையின் வழிமுறைகளையே பின்பற்றியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

SOURCE : REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்