காசாப் பகுதியை சேர்ந்த, 17 பத்திரிகையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி முடக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 22 முதல், பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி முடக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மே 24 அன்று அல்-ஜசீரா ஊடகத்தில் பணிபுரியும் 4 பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி மட்டும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள், ஹமாஸ் படையினர் குறித்து செய்தி சேகரிப்பதற்காகவே , ஹமாஸ் சார்ந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் இடம்பெற்றிருந்தாக கூறியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள காசாவிலுள்ள அல்-ஜசீரா பத்திரிகையின் முக்கிய பொறுப்பாளர், “ஹமாஸ் குழுக்களில் இருந்தால் மட்டுமே அவர்களது பத்திரிகை கடமையை முழுமையாக புரிய இயலும் ” என்றும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,இதுகுறித்து தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “தீங்கு விளைவிக்கக்கூடியவற்றை தடுத்தல் மற்றும் அதன் விதிகள்” என்ற அதன் கொள்கைகளுக்கு இணங்க இந்தக் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை திட்டமிட்டு வாட்ஸ்ஆப் செயலி தடை செய்துள்ளதா என்பது தெளிவாக இல்லை என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.