மகாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் ‘காயத்ரி மந்திரம்’ மற்றும் ‘பகவத்கீதை’ பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
“மாணவர்கள் தங்கள் இளம் வயதிலேயே பகவத் கீதையைப் படிக்கத் தொடங்கினால் அவர்கள் நம் நாட்டின் சிறந்த மற்றும் நாகரீகமான குடிமக்களாக இருப்பார்கள். பகவத்கீதை இந்து மதத்தில் உள்ள ஒரு புனித நூலாகும், மற்ற மதத்தினரும் அதைப் படிக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் அவற்றைப் படிக்கத் தொடங்கினால், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைத் தைரியமாகவும், பயமின்றியும் எப்படி எதிர்கொள்வது என்பது அவர்களுக்குப் புரியும்” என்று பாஜகவைச் சேர்ந்த யோகிதா கோலி தெரிவித்துள்ளார்.
“பள்ளிகளில் காயத்ரி மந்திரம் மற்றும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயமாக இருக்க வேண்டும். இவை மத நூல்கள் மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று மூத்த பாஜக தலைவர் பாலசந்திரா ஷிர்சத் கூறியுள்ளார்.
மும்பை மாநகராட்சியின் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களைப் பிளவுபடுத்தவே பாஜக இத்தகைய கோரிக்கைகளை வைத்து வருகிறது என்று சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான ரயீஸ் ஷேக் எதிர்ப்பு தெரிவித்தார். 2022 மார்ச் இறுதியில் மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.