Aran Sei

பிணை மறுக்கப்பட்டதை எதிர்த்துக் கௌதம் நவலகா மேல்முறையீடு – தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்றம்

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சமூக ஆர்வலர் கௌதம் நவலகா தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் கௌதம் நவலகா, தற்போது தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்  மூலம் 2019 ஆண்டு செப்டமர் 9 ஆம் தேதி, அளித்த மனுவை, நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கர்னிக் அடங்கிய அமர்வு விசாரித்தது.

34 நாட்கள் நவலாகா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) படி என்ஐஏ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை, எனவே நவலகா பிணைக்கு தகுதியானவராகிறார், எனக் கபில் சிபில் வாதிட்டார்.

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியை காட்டியவரின் ஜாமீன் நிராகரிப்பு : புகைப்படமே கதை சொல்கிறது : டெல்லி நீதிமன்றம்

மத்திய அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, வீட்டுக் காவலில் இருந்த நாட்களை, நீதிபதி முன்பாக ஆஜர்படுத்திய தினமாகக் கருத முடியாது என்றும், நவலகா ஒரு சுதந்திர மனிதர், அவர் காவலிலும் இல்லை, பிணையிலும் இல்லை என்று வாதிட்டார்.

நவலகா,  இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) உறுப்பினர்களுடன் ரகசிய தொடர்புகளில் இருந்ததோடு, தீவிர பங்காற்றியதாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டப்படுள்ளது.

கர்நாடகாவிலிருந்து காசிப்பூருக்கு – விவசாயிகள் போராட்டத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு

இந்த வழக்கில் இதுவரை நடைபெற்றது

ஆகஸ்ட் 28, 2018 – புனேவில் கைது செய்யப்பட்ட நவலகா, டெல்லி நீதிமன்ற உத்தரவின் பெயரில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

அக்டோபர் 1, 2018 – நவலகாவின் கைதை டெல்லி நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டது. நவலகா முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்

ஏப்ரல் 8, 2020 – நவலகாவை ஒரு வாரத்திற்குள் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 14,2020 – தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜரான நவலகா, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

ஏப்ரல் 25, 2020 – நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார் (தொடர்ந்து நீட்டிப்பில் உள்ளது)

ஜூன் 29, 2020 – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் விண்ணப்பம் ஒன்றை அவர் தாக்கல் செய்திருந்தார்

ஜூலை 12, 2020 – அவரது ஜாமீன் மனுவை என்ஐஏ நீதிமன்றம் நிராகரித்தது.

செப்டம்பர் 9, 2020 – பிணை மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

டிசம்பர் 16, 2020 – தீர்ப்பை ஒத்திவைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 8, 2020 – மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தி ஹிந்து வில் வெளியான செய்தியின் தமிழாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்