Aran Sei

எழுத்தாளர் கௌரிலங்கேஷ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவரை வழக்கிலிருந்து விடுவித்த உயர்நீதிமன்றம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

ழுத்தாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோகன் நாயக்கின் மீதான ஒருங்கிணைந்த குற்றவியல் (KCOCA)தடுப்புச் சட்டத்தைக் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகக் கௌரி லங்கேஷின் தங்கை கவிதா லங்கேஷ் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் கௌரி லங்கேஷ்ன் குடும்பம்

சமூக வன்முறை மற்றும் வலது சாரிகளின் செயல்பாடுகள்குறித்து தொடர்ந்து எழுதி வந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ், கடந்த செப் 5 2017 அன்று வலது சாரி ஆதரவாளர்களால், அவரது வீட்டின் வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் திட்டம் தீட்டிய அமோல் காலே மற்றும் ராஜேஷ் பங்கேரா ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடைய மோகன் நாயக்கின் மீதான கர்நாடக மாநில ஒருங்கிணைந்த குற்றவியல் (KCOCA)தடுப்புச் சட்டத்தை நீக்கி, கடந்த ஏப்ரல்  22 அன்று  ,அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பின் நடந்த கலவரம்குறித்து விசாரணையில் ஈடுபட்ட மனிதஉரிமைகள் ஆணையம் – சமூகவிரோத கும்பல் தாக்கியதாக குற்றச்சாட்டு

இதனைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய, விடுவிப்பு மனுவை [Special Leave Petition] கௌரி லங்கேஷின் தங்கை கவிதா லங்கேஷ் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் , வரும் ஜூலை 15  அன்று,  கவிதாவின் மனு விசாரிக்கப்படும் வரை, மோகன் நாயக்கிற்கு ஜாமீன் அளிக்கபடக் கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக   தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

source;   Citizens for Justice and Peace

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்