Aran Sei

குப்பைகளைக் கொட்ட கட்டணம் விதித்த மாநகராட்சி : திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னையில் குப்பைகளைக் கொட்ட சென்னை மாநகராட்சி கட்டணம் விதித்துள்ளதற்கு திமுக  தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சென்னையில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அத்துடன் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படவுள்ளது

குப்பை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் , நட்சத்திர விடுதிகளுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் , தியேட்டர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ,அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3ஆயிரம், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ரூ.500 முதல் ரூ.1000 , பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் , மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் , தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் என குப்பை கொட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்கள் என்ற அடிப்படையில் குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ.500, தரம் பிரித்துக் கொட்டாதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5ஆயிரம், கட்டுமான கழிவுகளைப் பொது இடத்தில் கொட்டினால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம், குப்பை எரித்தால் ரூ.500 முதல் ரூ.2ஆயிரம் அபராம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இம்முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”சென்னையின் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் அ.தி.மு.க அரசின் ’குப்பை கொட்டக் கட்டணம்’ அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். இல்லையெனில், தி.மு.க ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்