விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சரும் விசாகப்பட்டினம் வடக்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான தெலுங்கு தேச கட்சியின் காந்தா ஸ்ரீநிவாச ராவ், தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று (பிப்பிரவரி 12), ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் குர்மானபாலத்தில் உள்ள விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் தொடர் உண்ணாவிரதத்தில், தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த காந்தா ஸ்ரீநிவாச ராவ் பங்கேற்று பேசியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“சோசியலிசம் என்பது சுமை; பொதுத்துறை நிறுவனங்களை விற்பதே எங்கள் நோக்கம்” – நிர்மலா சீதாராமன்
அப்போது, “சபாநாயகருக்கு என் ராஜினாமை அனுப்பியுள்ளேன். எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுவதைத் எதிர்த்து நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் இனி நான் பங்கேற்பேன்.” என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி 7 ஆம் தேதி, தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், சபாநாயகருக்கு முறையான ராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் மத்தியில் அறிவித்திருந்தார். மேலும், எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராட அரசியல் சாரா அமைப்பு ஒன்றையும் தொடங்கவுள்ளதாகத் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த காந்தா ஸ்ரீநிவாச ராவ் தெரிவித்திருந்தார் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.