Aran Sei

விவசாயிகளை காலிஸ்தான்களுடன் ஒப்பிட்ட கங்கனா – குருத்வாரா நிர்வாகக் குழு எதிர்ப்பு

ட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை கொசுக்களைப் போலத் தனது ஷூவின் கீழ் நசுக்கினார் என்றும் தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ள திரைக்கலைஞர் கங்கனா ரனாவத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, கங்கனாவை சிறை படுத்துங்கள் அல்லது மனநல மருத்துவமனையில் சேருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அரசு வழங்கிய பல்லாயிரம் கோடி சலுகை – அதையும் மீறி கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், “காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா காந்தி) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் ( இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தான் பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் அடுத்த ஸ்டோரியில் இந்திரா காந்தி இருக்கும் படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், “கலிஸ்தானி இயக்கம் எழுச்சி பெறும் நிலையில், அவரது (இந்திரா) கதை முன்னெப்போதையும் விட இப்போது தான் மிகவும் பொருத்தமானது” எனப் பதிவிட்டுள்ளார்.

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

திரைக்கலைஞர்  கங்கனா ரனாவத்தின் இந்தப் பதிவுக்கு குருத்வாரா அமைப்பும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.  கங்கனா ரனாவத் சீக்கியர்களை இழிவான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் சீக்கிய சமூகத்தை காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த 1984 மற்றும் அதற்கு முன் நடந்த இனப் படுகொலையையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசியுள்ள சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, கங்கனாவின் அறிக்கை அவரின் மலிவான மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. மூன்று வேளாண் சட்டங்கள் காலிஸ்த்தான்களால் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறவேண்டும் என்றும் கங்கனாவை சிறை படுத்துங்கள் அல்லது மனநல மருத்துவமனையில் சேருங்கள் என்று சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறியுள்ளார்.

Source: Times of India

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்