Aran Sei

சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைக்கும் குஜராத் அரசு – திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காந்தியின் கொள்ளுப் பேரன்

Credit: The Wire

கமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை மறு சீரமைக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்துக் காந்தியின் கொள்ளுப் பேரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் அரசின் முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவைக் குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

மார்ச் 25 தேதி துஷார் காந்தியின் சார்பாக வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இம்மனுமீதான விசாரணை ஏப்ரல் 1 தேதி தொடங்கும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, சி.டி.ரவிக் குமார் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

குஜராத் அரசின் திட்டம், ஆசிரமத்தின் தோற்றத்தை மாற்றும், காந்தி சித்தாந்தத்தை உள்ளடக்கிய எளிமையைப் பாதிக்கும் என துஷார் காந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மறுசீரமைப்பு திட்டத்தின் தன்மை மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அதிகப்படியான ஈடுபாட்டால் ஆசிரமம் காந்திய நெறிமுறைகள் இழக்கக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி: இந்துத்துவாவினரின் எதிர்ப்பால் திரையிட முடியாமல்போன ‘இன்ஷா அல்லா’ திரைப்படம்

ஆசிரமம் அமைந்திருக்கும் ஒரு ஏக்கர் பகுதியில் இருக்கும் மூன்று முக்கிய இடங்களை அரசு தொடாது என மாநில அரசு உறுதியளித்ததை தொடர்ந்து துஷார் காந்தியின் மனுவைக் குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

”ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆசிரமத்தை அரசு தொடாது என்றும், அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும் அரசாங்கம் உத்திரவாதம் அளித்துள்ளது. எனவே, மனுதாரரின் அனைத்து அச்சங்களும் அரசாங்க உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

1917 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் காந்தி வாழ்ந்த ஆசிரமத்தை மேம்படுத்துவதற்காக மகாத்மா நினைவு ஆசிரமம் மற்றும் சுற்றுப்புற மேம்ப்பாட்டுத் திட்டத்தை ரூ. 1200 கோடி மதிப்பில் குஜராத் அரசும் ஒன்றிய அரசும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

அதன்படி, பாரம்பரிய கட்டிடங்களை கொண்ட ஆசிரமத்தின் பரப்பளவு 5 ஏக்கரில் இருந்து 55 ஏக்கராக மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்