Aran Sei

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – எஃப்பிஐ விசாரணை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்,  காந்தி சிலை சேதம் செய்யப்பட்ட விவகாரத்தில், எஃப்பிஐ (மத்திய புலனாய்வுத் துறை) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, இந்திய வம்சா வழியைச் சேர்ந்த, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை கடந்த வாரம், அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டதாகவும், இது  தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழக்குப் பதிவுச் செய்தி விசாரித்து வருவதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்த மோசமான செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், மேலும் இந்திய அமெரிக்கர்களை அச்சுறுத்தும் விதமாக நிகழ்ந்திருக்கும் இந்தக் குற்றம் குறித்து, எஃப்பிஐ அமைப்பு  விசாரணை மேற்கொள்ள வேண்டும்:” என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசு தின மோதல் தொடர்பாகச் சுயாதீன விசாரணை வேண்டும் – மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

”அமைதி மற்றும் அகிம்சையின் அடையாளமாக இருப்பதோடு, அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் அகிம்சை வழி போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்த காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது, அவரின் போதனைகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவூட்டுகிறது” என ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அமி பெரா  “டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கால் அமெரிக்காவிலும், காந்தியால் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட அகிம்சை முறையிலான போராட்டங்கள், அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும்” என கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.

”எங்கள் நாட்டின் வலிமை பன்முகத்தன்மையிலும், எங்கள் கருத்துக்களையும் வேறுபாடுகளையும் அமைதியான முறையில் தெரிவிப்பதிலும் தான் உள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்துவதையும், அழிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எங்கள் சமூகத்தில் இடமில்லை” என அமி பெரா கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக குறியீடு: 53வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா – 6 ஆண்டுகளில் 26 இடங்கள் பின்னடைவு

மற்றொரு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பீட் செஸ்சன், சேதப்படுத்தப்பட்ட அந்த காந்தியின் சிலை, அமைதியின் அடையாளமாக, ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என்றும், ”வெறுக்கத் தக்க இந்தக் குற்றத்தை ஏற்க முடியாது, அந்தச் சிலை மீண்டும் அங்கு நிறுவப்படும்” என அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்