Aran Sei

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

கூவம் ஆற்றங்கரையோரமான காந்தி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்ததால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கூவம் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னைத் தீவுத்திடல் அருகில், கூவம் ஆற்றங்ரையோரத்தில் உள்ளது காந்தி நகர். இங்கு ஏராளமான மக்கள் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  இவர்கள் கூவம் ஆற்றங்கரையோரத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், உடனே அந்த இடங்களை விட்டுக் காலி செய்யவும், பொதுப்பணித்துறை சார்பில் 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இன்னும் வடியாத வெள்ளம் – தத்தளிக்கும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு மக்கள் | Aran Sei

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குக் குடிசை மாற்று வாரியத்தின் கீழ், பொதுப்பணித்துறை சார்பில், அங்கிங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் 2092 வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அதில், முதற்கட்டமாக 1700 குடும்பங்கள் அங்கு மறுகுடியமர்த்துதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 346 குடும்பங்கள் கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் மாற்றப்படவில்லை.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 9) காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு இடிக்கத் தொடங்கியுள்ளனர்.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு (aransei.com)

நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டருக்குள் வீடுகளை ஒதுக்கக்கோரியும், பெரும்பாக்கத்திற்குச் சென்றால் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்படும் என்று கூறியும் மதியம் 1 மணி அளவில் கூவம் ஆற்றில் இறங்கிப் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சிலருக்கு இன்னும் வீடுகள் ஒதுக்கப்படாமலும் முன்னறிவிப்பு இன்றியும் வீடுகளை இடித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாரணாசி : நரேந்திரமோடி வருகைக்காக அகற்றப்பட்ட சேரிக் குடியிருப்புகள் | Aran Sei

இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பல மணி நேரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்களிடம் மக்கள் பிரதிநிதிகளோ, ஆதிகாரிகளோ யாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வரவில்லை. இந்த மக்களின் உயிரையும், அவர்களுடைய உடமைகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் இது எதிரொலிக்க வேண்டும். மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குதான்.” என்று தெரிவித்துள்ளார்.

வேல் யாத்திரை முருகனும் கொல்லப்பட்ட முருகேசன்களும் | Aran Sei

மேலும், “பொதுப்பணித்துறையைக் கையில் வைத்திருக்கும் துணை முதல்வர்  நினைத்தால் அவர்களுக்குச் சென்னையில் இடம் ஒதுக்கித் தர முடியும்.” என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டம் ஆறு மணி நேரத்திற்கும் மேல் நடந்துள்ளது. பின்னர், குடியரசு கட்சி மாநில தலைவர் லிங்கோஷ், இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் ஆகியோர், ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் ஆற்றில் இருந்து வெளியே வந்துள்ளனர். போராட்டத்தின் போது மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹத்ராஸ் குற்றம் – சாதிய, பெண் விரோத பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை (aransei.com)

50 ஆண்டுகளுக்கு முன் காந்தி நகர்ப் பகுதி 18 வீடுகள் கொண்ட குடியிருப்பாக இருந்த காலத்தில் இருந்து வாழ்ந்து வருவதாகக் கூறும் ஏழுமலையிடம் அரண்செய் பேசிய போது, ”பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில், கலைஞர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கூவம் ஆற்றில் உள்ள சேற்றை அப்புறப்படுத்துவதற்காக, அந்தத் தொழில் செய்யும் ஒட்ட செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முதலில் இங்கு (காந்தி நகர்) குடியேற்றினார்.” என்று கூறினார்.

அவர்களைத் தொடர்ந்து, அரியலூர், திண்டிவனம், விழுப்புரம் திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து பல தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குடியேறியதாகவும், அவர்கள் கொத்தால் சாவடி, பூக்கடை போன்ற பகுதிகளில் பூக்கட்டுதல், ரிக்சா ஓட்டுதல், மாடுகளை வளர்த்தல், பால் விற்பனை செய்தல் போன்ற வேலைகள் செய்து வந்ததாகவும் ஏழுமலை கூறினார்.

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை (aransei.com)

”இப்போது அவர்கள் 3000 குடும்பங்களாக மாறியுள்ளார்கள். இதில் 90 சதவீதத்திற்கு மேல் தலித் சமூக மக்கள்தான்.” என்று ஏழுமலை தெரிவித்தார்.

நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஒரு பக்கம் போராட்டம் செய்துகொண்டிருக்கிறோம். மறுபக்கம் ஜேசிபியை வைத்து, வீடுகளை இடித்துக்கொண்டிருக்கிறார்கள். வீடுகளை இழந்து தெருவில் பொருட்களோடு உட்கார்ந்திருந்தவர் சிலரை, காவல்துறையினர் லாரிகளில் ஏற்றிப் பெரும்பாக்கத்திற்குக் கொண்டு போகிறார்கள்.” என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

29 பட்டியல் சாதி குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு (aransei.com)

“இங்கிருந்து (காந்தி நகர்) 2 கிமி தொலைவில் உள்ள யானைகவுனியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நிறைய காலி வீடுகள் உள்ளன. இதுபோக, காசிமேடு, மூலக்கொத்தளம் போன்ற பகுதிகளிலும் உள்ளன. அங்கே வீடுக்கொடுக்கச் சொல்லிக் கேட்கிறோம்.” என்று தெரிவித்தார்.

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’ | Aran Sei

இதுகுறித்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வாவிடம் அரண்செய் பேசிய போது, “கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, இந்தப் பகுதியில் மிச்சம் இருக்கும் மக்களுக்குச் சென்னைக்குள்ளேயே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு கொடுக்கச் சொல்லி, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மீதமுள்ள 346 வீடுகளிலிருந்தும் வீட்டுக்கு ஒருவர் வந்து மனு கொடுத்தனர். ஆட்சியரும் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.  இந்நிலையில், இன்று (டிசம்பர் 8) காலை 500 காவல்துறையினரும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் வந்து வீடுகளை இடிக்கத் தொடங்கிவிட்டனர்.” என்று கூறினார்.

மேலும், “மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இப்பிரச்சினையில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை, வீடுகளை இடிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன் | Aran Sei

இது குறித்து, சோசியலிச தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த சதீஷிடம் அரண்செய் பேசிய போது, “முன்பு மறுகுடியமர்த்துதலுக்கு நிறைய விதிமுறைகள் இருந்தன. அதன்படி, ஒருவரை எங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்களோ அதிலிருந்து, 5 கி.மீ-க்குள்தான் அவருக்கு வீடு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற தொலைத்தூரங்களில் ஒதுக்கீடு செய்கிறார்கள்.” என்று கூறினார்.

“அந்தப் பகுதிகளில் 21 ஆயிரம் வீடுகளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். இவர்கள் சென்னையில் சைதாப்பேட்டை, தி.நகர், தேனாம்பேட்டை போன்ற இடங்களில் இருந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர். பெரும்பாலானோர் தலித் மக்கள். இவர்களை ஒரே இடத்தில் வந்து குவித்து வைக்கிறார்கள். இங்கே வறுமை இன்னும் கூடுகிறது.” என்று தெரிவித்தார்.

மேலும், ”குடியமர்த்தப்படும் இடத்தில் வேலைவாய்ப்புகள், கல்வி நிலையங்கள், மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லை என்றால், அவர்களுக்குக் குறைந்தது, மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்குத் தொழிற்பயிற்சியும் ஊக்கத் தொகையும் கொடுக்க வேண்டும். உதாரணமாக, ஆட்டோ ஓட்டும் பயிற்சிக் கொடுத்து, அட்டோ வாங்குவதற்கான கடனுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று சதீஷ் விதிகளை மேற்கோள்காட்டினார்

ஆரோக்கியத்தை கொடுக்கும் சாதி மறுப்பு திருமணம் – மரபணு ஆய்வு முடிவு | Aran Sei

பொருளாதாரச் சுமைகள், அதையொட்டி எழும் வறுமை இவற்றைத்தாண்டி, உளவியல் ரீதியாக இந்த மறுகுடியமர்த்துதல் அவர்களை எப்படி பாதிக்கிறது என்ற கேள்விக்கு, “அரசு கட்டித்தரும் அடுக்கு மாடி சிறிய பெட்டி வீடுகளில் அவர்களுக்கு எந்த ப்ரைவசியும் இருக்காது. எல்லோரும் பெரும்பாலும் ஒரே அறையில் இருப்பார்கள். கணவன் மனைவிக்கு அவர்களுக்குத் தேவையான தனிமை கிடைக்காது. அதுவே அந்தக் குடும்பத்திற்கு மன அழுத்தத்தைத் தரும். அதன் காரணமாக, தற்கொலைகள் அதிகமாகின்றன. சென்னை காவல்நிலையங்களில், தற்கொலைகள் அதிகம் பதிவாகும் இடம் துரைப்பாக்கம். செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் அதன் காவல் எல்லைக்குள்தான் வருகிறது.” என்று சதீஷ பதிலளித்தார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்