Aran Sei

மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய கட்சியுடன் கூட்டணி – காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள ஆனந்த் சர்மா

காங்கிரஸ் அதிர்ப்தி தலைவர்கள் (ஜி -23) குழுவின் கூட்டம், ஜம்முவில் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா காங்கிரஸ் கட்சியை நேரடியாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) என்ற கட்சியுடன்,  காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதென்பது காங்கிரஸின் சித்தாந்தத்திற்கே எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 28), காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரும் மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இடதுசாரி தலைவர்களுடனும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியின் நிறுவன தலைவர் அப்பாஸ் சித்திக்குடனும் கூட்டணியை அறிவித்து, பொதுக்கூட்ட மேடையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

‘பிரதமர் மோடி தன் சுயத்தை மறைப்பவரல்ல’ – மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி-23 குழுவில் உள்ள தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சியை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஜி -23 குழுவின் தலைவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கோடு, அக்குழுவில் உள்ள பிருத்விராஜ் சவானை, அஸ்சாம் மாநில வேட்பாளர் தேர்வுக்குழு தலைவராக காங்கிரஸ் கட்சி நியமித்த மறுநாளே, ஆனந்த சர்மாவின் இந்த விமர்சனம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனந்த் சர்மாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் தி இந்து –விடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ஆனந்த் சர்மா முதலில் கள நிலவரத்தை அறிய என்னுடன் பேசியிருக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளுடன் 92 இடங்களிலும் மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற சக்திகளுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலிருந்து காங்கிரஸ் விலக வேண்டும் – சிவசேனா யோசனை

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் சர்மா, “காங்கிரஸ் கட்சியின் ஆன்மாவான காந்திய மற்றும் நேருவின் மதச்சார்பின்மைக்கு எதிராக, இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியுடனும், இதுபோல வேற சில கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது. இம்முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.” என்று தனது கட்சியை நேரடியாக விமர்சித்துள்ளார்.

மேலும், “வகுப்புவாதவாதிகளை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் பாரபட்சம் காட்டக் கூடாது. மதத்தையும் இனத்தையும் பொருட்படுத்தாமல், எல்லா வகையிலும் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும். மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரின் செயற்பாடுகள் வேதனையானதும் வெட்கக்கேடானதும் ஆகும். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று ஆனர்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்