கொரனோ காலத்தில் அரசு கொடுத்த உறுதி மொழிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(Federation of Government Doctors Association (FOGDA)) தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24 ம் தேதி அன்று நடந்த மருத்துவர்கள் கூட்டமைப்பின் அவசரக்கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளதாகவும், இதேபோல மருத்துவத்துறையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை தீர்க்கப் போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவிலியர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
கொரோனா சிகிச்சையின்போது பாதிப்புக்கு உள்ளான மருத்துவர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்த 2 லட்சம் ரூபாயும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்திற்கு அறிவித்த 50,000 ரூபாயையும் உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
மேலும், கொரனோ காலக்கட்டத்தில் 18,000 அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதார பணியாளர்களும் எந்த வித கூடுதல் சலுகைகளும் பெறாமல் மக்களுக்காக உழைத்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 கோடி மக்களுக்குச் சுமார் 18,000 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாகவும் எனவே அரசு விரைந்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.