Aran Sei

ஜப்பான் அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய தென் கொரியா

புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து, அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் கொரியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 13 அன்று, ஜப்பானில் உள்ள புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அணுக்கழிவு நீரை சுத்திகரித்து கடலில் கொட்ட முடிவெடுத்திருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்திருந்தது.

கடலில் கொட்டப்படும் புக்குஷிமா அணுக்கழிவு நீர் – தமிழகத்தில் செயல்படும் அணுமின் நிலையங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா?

இதற்கு, சூழலியலாளர்களும் , மீனவர்ககளும் , ஜப்பானின் அண்டை நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கடந்த 2011 , ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. இந்த மூன்று பேரிடர்களாலும் கிட்டத்தட்ட 18,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு அந்த அணுமின் நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு

இந்நிலையில், ஏப்ரல் 13 அன்று அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவு நீரில், கதிரியக்க தன்மை கொண்ட ஐசோடோப்களை நீக்கிக் கடலில் கொட்டுவதாக ஜப்பான் அரசு முடிவு செய்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரியா அரசு சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் மூன் ஜே அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

நிலையற்ற மனநிலையில் இருக்கும் ட்ரம்ப் : அணுகுண்டு தாக்குதல் நடத்தாமல் தடுக்க வேண்டும் – நான்சி பெலோசி

மேலும் ஏப்ரல் 14 அன்று சர்வதேச கடல் சார் தீர்ப்பாயத்தில் நடைபெறும் கூட்டத்தில், ஜப்பானின் முடிவுகுறித்து மூன் ஜே முறையிட உள்ளதாகவும், அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்