Aran Sei

கடலில் கொட்டப்படும் புக்குஷிமா அணுக்கழிவு நீர் – தமிழகத்தில் செயல்படும் அணுமின் நிலையங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா?

ப்பானில் உள்ள புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அணுக்கழிவு நீரை கடலில் கொட்ட முடிவு செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2011 அன்று, ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 9.0 பதிவாகிய மிகமோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடலில் சுனாமியும் ஏற்பட்டிருந்தது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு

இதன் காரணமாக புக்குஷிமா அணு மின் நிலையத்தில் அணுக்கதிர் வீச்சும் ஏற்பட்டது. இந்த மூன்று பேரிடர்களால் கிட்டத்தட்ட 18,000 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு புக்குஷிமா அணு மின்நிலையம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சுமார் 1.3 மில்லியன் டன் அளவிலான அணுக்கழிவு நீர் சுத்திகரிப்புக்கு பின் கடலில் கொட்டப்பட இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம், 500 ஒலிம்பிக் நீச்சல் குளங்கள் நிரம்பும் அளவுள்ள சுமார் 1.3 மில்லியன் டன் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு பின் கடலில் வெளியேற்றப்படவுள்ளதாகக் கூறியுள்ளதாக தி இந்துசெய்தி கூறுகிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் – பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆய்வறிக்கை.

மேலும், அணுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நீர் வெளியேற்றப்படுவது குறித்து தெரிவித்துள்ள டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம், கதிர்வீச்சு தன்மையுள்ள ஐசோடோப்கள் நீக்கப்பட்டு டிரிடியம் கலந்த நீர் மட்டும் வெளியேற்றப்பட உள்ளதாகவும், டிரிடியம் கலந்த நீரும் பாதுகாப்பான அளவில் கடலில் கொட்டப்பட்ட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள புக்குஷிமா மீனவர் சங்கம், கடலில் அணுக்கழிவு நீர் கொட்டப்படக் கூடாது அது மிகபெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றுதி இந்து செய்தி தெரிவிக்கிறது.

1,600 மெகாவாட் ராமநாதபுரம் உப்பூர் அனல்மின்நிலையத் திட்டம் – நிறுத்தி வைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

கடந்த 2014 ஆண்டு சயின்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் டிரிடியமினால் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு உள்ளது எனவும், பிற கழிவுகளும் மோசமான பாதிப்பை உண்டாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடலில் அணுக்கழிவு நீர் வெளியேற்றப்படுவது குறித்து அரண்செய்யிடம் பேசிய ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் வெற்றி செல்வன், “புக்குஷிமா அணுஉலையில் இருந்து அணுக்கழிவு நீர் கடலில் கொட்டப்படும் சம்பவத்தை நாம் தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கல்பாக்கத்தில் செயல்படும் அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் கொட்டப்படும் நீரால் அப்பகுதியில் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரம்பரிய மீன் இனங்கள் குறைந்திருக்கிறது. அப்பகுதியில் மீன்வளம் குறைந்துள்ளதாதல் மீனவர் எண்ணிக்கையும் குறைத்துள்ளது. மேலும், அணுக்கதிர்வீச்சினால் ஏற்படும் மாசினை அணுமின் உற்பத்தி மேற்கொள்ளும் அணுமின் உற்பத்தி நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அணுமின் உற்பத்தி நிறுவனம் தெரிவிக்கும் புள்ளிவிவரத்திற்கும் மாசுபாட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வியலும் வெவ்வேறாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இது குறித்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட வேண்டும் ” என்றும் கூறியுள்ளார்

இந்த ஆண்டு டோக்கிடோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்புக் கருதி  அணுக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக முன்னள் ஜப்பானிய அமைச்சர் ஷின்ஷோ அபே 2013 ஆண்டு தெரிவித்திருந்தார். புக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அணுக்கழிவு நீரை கடலில் கொட்டுவதற்கு சீனா, தைவான், தென் கொரியா போன்ற அண்டை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்