Aran Sei

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மக்களவையில் இன்று (ஏப்ரல் 4), பூஜ்ஜிய நேரம் தொடங்கியவுடன், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எரிபொருள் விலை உயர்வு பிரச்னையை எழுப்பியுள்ளதோடு, முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.

இம்முழக்கங்களையும் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாது, மக்களவைக்கு தலைமை வகித்த ராஜேந்திர அகர்வால் பூஜ்ஜிய நேரத்தைத் தொடர்ந்துள்ளார். இதனால், காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

8 ஆண்டுக்கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்த ஒன்றிய அரசு – ப.சிதம்பரம் தகவல்

மறுபுறம், விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தியதால், இன்று (ஏப்ரல் 4) மாநிலங்களவை நடவடிக்கைகள் தோராயமாக 50 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 4), பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 40 காசுகள் உயர்ந்துள்ளது.

இதன் வழியாக, கடந்த 14 நாட்களில் 12 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக லிட்டருக்கு ரூ.8.40 உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க மறுத்த மாநிலங்களவைத் தலைவர் – எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அவை ஒத்திவைப்பு

நான்கு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த விலை முதல் முறையாக மார்ச் 22 அன்று திருத்தப்பட்டது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.109.34 ஆகவும், டீசல் விலை ரூ.99.42 ஆகவும் உள்ளது.

Source: PTI

விண்ணை தொட்ட பெட்ரோல், டீசல் விலை !! மக்களின் கருத்து என்ன?

அறிய க்ளிக் செய்யவும்..

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்