Aran Sei

துணை ஆய்வாளர் தேர்வில் கேட்கப்பட்ட பாஜக ஆதரவு கேள்விகள் – மன்னிப்பு கோரிய ஹரியானா பணியாளர் தேர்வாணய தலைவர்

ரியானா மாநிலத்தில் துணை ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில், பணிக்கு பொருத்தமற்ற வகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹரியானா பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் போபால் சிங் காத்ரி மன்னிப்பு கோரியுள்ளார்.

செப்டம்பர் 26 ஆம் தேதி, ஹரியானா மாநிலத்தில் காலியாக உள்ள 463 துணை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு   இரண்டு ஷிப்ட்களாக தேர்வுகள் நடைபெற்றன. இதில், பல்வேறு கேள்விகள் தேர்வுக்கு பொருத்தற்ற வகையில் பாஜக கட்சி தொடர்பாக, பாலிவுட் சினிமா தொடர்பாகவும் இருந்துள்ளது.

”பாஜக தலைவரும் ஹரியானா உள்துறை அமைச்சருமான அணில் விஜ்-ன் தனித்துவமான அம்சம் என்ன?. உத்திரகண்ட் பாஜக அரசில் இருக்கும் ஹரியானாவுடன் அமைச்சர் யார்? அண்மையில் தந்தையை இழந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் என்ன? பரோடா இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யார்?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அரண்செய் சிறப்பிதழ் – பஞ்சமி நிலம்

”ஹரியானாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மருமகள் யார்?. என்.எச்-10 திரைப்படத்தின் கதாநாயகி யார்? பேட்டி பச்சாவ், பேட்டி பட்டாவ் திட்டத்தின் துவக்கவிழாவின்போது மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை யார்?” என பாலிவுட் சினிமா தொடர்பான கேள்விகளும் இடம் பெற்றிருந்தன.

ஹரியானா பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் போபால் சிங் காத்ரி குறித்து ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது. அவரின் பெயரில் உள்ள ‘காத்ரி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? என கேட்கப்பட்டிருந்தது.

கலைக்கப்பட்டும் ஆயத தொழிற்சாலை வாரியம் – வாரியத்தின் சொத்துக்களை புதிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு கையளிக்கும் ஒன்றிய அரசு

இது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் பேசிய தேர்வாணயத்தின் தலைவர் போபால் சிங் காத்ரி, “தேர்வுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பல கேள்விகள் பொருத்தமற்றதாக இருந்துள்ளது. அவை கேட்கப்பட்டிருக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

”என்னை பற்றிக் கேட்கப்பட்ட கேள்வியும் பொருத்தமற்றது. இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு கேள்வித்தாள் தயாரித்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பதில் வந்தவுடன் அவர்களை கறுப்பு பட்டியலில் சேர்த்துவிடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் கடுமையான மின் தட்டுப்பாடு – ஆசிய பொருளாதாரம் சரிவை சந்திக்கும் என்று கணிப்பு

இதை யாரும் அரசியலாக்க வேண்டாம், ஒரு குறிப்பட்ட கட்சிக்கு ஆதரவாக திட்டமிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது போல இல்லை என தெரிவித்துள்ள போபால் சிங் காத்ரி, “ஹரியானா அரசு இந்த தேர்வால் மகிழ்ச்சியில் இல்லை. இது போன்று எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என கூறியுள்ளார்.

துணை ஆய்வாளர் பணிக்கு பொருத்தமானதாவோ அல்லது பொது அறிவு சம்பந்தமாகவோ ஒரு கேள்வியும் இல்லை என குற்றம்சாட்டியுள்ள தேர்வு எழுதியவர்கள், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்