Aran Sei

செயல்பாட்டாளர்கள் முதல் ஜேஎன்யூ மாணவர்கள்வரை – பெகசஸால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல்

பெகசஸ் ஸ்பவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் அம்பேத்கரியவாதிகள், தொழிற்சங்க மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சாதி எதிர்ப்புப் போராளிகள் மற்றும் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள்  பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான தரவுகளின்படி, அம்பேத்கரியவாதி அசோக் பார்தி, ஜவஹர்லால் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சாரியா, பஞ்யோத்ஸ்னா லாஹிரி, நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் கல்வி செயல்பாட்டாளர் பெலா பாட்டியா, ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் சிவகோபால் மிஸ்ரா, டெல்லியைச் சேர்ந்த தொழிலாளர் உரிமை ஆர்வலர் அஞ்சனி குமார், நிலக்கரி சுரங்க எதிர்ப்பு ஆர்வலர் அலோக் சுக்லா, டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரோஜ் கிரி, பஸ்தாரைச் சேர்ந்த ஆர்வலர் சுப்ரான்ஷு சவுத்ரி, பிபிசியின் முன்னாள் ஊழியரும் தொழிற்சங்கவாதியுமான சந்தீப் குமார் ராய் ’ரௌசி’ (தொழிலாளர் ஒற்றுமை என்ற பெயரில் தொழிலாளர் நல உரிமைகளை சார்ந்த ஊடகத்தை நடத்தி வருபவர்), ரௌசியின் சக ஊழியர் காலித் கான், பீகாரை சேர்ந்த ஆர்வலர் இப்சா ஷதாசஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

”டிஜிட்டல் தடவியல் சோதனை நடத்தப்படாமல், இவர்களின் செல்போன்கள் பாதிக்கப்பட்டதா அல்லது ஹேக் செய்யப்பட்டதா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் கசிந்த செல்போன் எண்களின் பட்டியலில் இவர்களின் எண்களும் இடம்பெற்றுள்ளதால், என்.எஸ்.ஓ நிறுவனத்தின் அடையாளம் தெரியாத வாடிக்கையாளரால் இவர்கள் வேவு பார்க்க திட்டமிடப்பட்டு இருக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தால்  ராணுவ தரக் கண்காணிப்பு தொழில்நுட்பம் என வகைப்படுத்தப்பட்டுள்ள பெகசஸ் மென்பொருள், தேசநலனில் அக்கறைக் கொண்டுள்ள அதற்காக செயலாற்றும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலையேற்றம் – 3.35 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்த ஒன்றிய அரசு

இந்நிலையில் இந்திய அரசு என்.என்.ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளரா இல்லையா என்பதை தெரிவிக்க மோடி அரசு மறுத்து வருகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்