Aran Sei

இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை

மோடி அரசு இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறது, என அமெரிக்காவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான ’ஃப்ரீடம் ஹவுஸ்’ (Freedom House) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, விமர்சகர்களை ஒடுக்குவது போன்ற செயல்பாடுகளால், ‘சுதந்திரமான நாடு’ என்ற அந்தஸ்தில் இருந்து ‘ஒரளவிற்கு சுதந்திரமான நாடு’ என்ற அந்தஸ்திற்கு இறங்கியுள்ளது என்று, அந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

அரசியல் உரிமைகள் மற்றும் குடிமை சுதந்திரங்களின் குறியீட்டுகளின் அடிப்படையில் இந்தியாவின் சுதந்திர மதிப்பெண் 4  புள்ளிகள் குறைந்து, ஒரளவு சுதந்திரம் உள்ள நாடு என்ற பட்டியலிக்கு சென்றிருந்த நிலையில், காஷ்மீர் மற்றும் டெல்லி எல்லைகளில் இணைய  சேவைகளை முடக்கியது, இந்தியாவின் மதிப்பெண்ணை 51 ஆக குறைத்திருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

“பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கமும், அவரது கட்சி நேரடியாக அல்லது கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களும், கடந்த ஆண்டில் தொடர்ந்து விமர்சகர்களைத் ஒடுக்கின, மேலும் கோவிட் -19 க்கு  அவர்கள் விதித்த கடுமையான ஊரடங்கின் விளைவாக, கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆபத்தான மற்றும் திட்டமிடப்படாத இடம்பெயர்வவை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர்” என்றும் “வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டதோடு, அவர்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் 6 ஊடகவியலாளர்கள் கைது – பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக ராணுவம் குற்றச்சாட்டு

டெல்லி கலவர வழக்கில் காவல்துறை சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதி, இடமாற்றம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும், மதமாற்றங்களை தடை செய்ய மதமறுப்பு திருமணங்களைத் தடை செய்திருக்கும் உத்திரபிரதேச அரசின் முடிவு குறித்த கவலையும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

“ஜனநாயக நடைமுறையின் பாதுகாவலனாக இருந்து, சீனா போன்ற நாடுகளின் சர்வாதிகார செல்வாக்கிற்கு எதிராக பணியாற்றுவதை விடுத்து, மோடியும் அவரது கட்சியும் இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கிச் செலுத்துகின்றன” என்று அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்

அமெரிக்க அரசாங்க மானியங்கள் மூலம், பெருமளவில் நிதியளிக்கப்படும் ஃபீரிடம் ஹவுஸ் மனித உரிமை அமைப்பு, 1941 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்தின் போக்கைக் கண்காணித்து வருவகிறது. கடந்த 15 ஆண்டுகளில் உலகளாவிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 75 சதவீத மக்கள், ஜனநாயகம் சரிந்த நாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்