Aran Sei

போராடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் – ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

Image Credits: The Print

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒரு மாதத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக, டெல்லியின் சிங்கு எல்லையில் இலவச வைஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக அறிஞர்கள் கூட்டறிக்கை – மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

செய்தியாளர்களின் பேசிய ராகவ் சாதா, “விவசாயிகளின் காவலர் (சேவதார்) அரவிந்த் கெஜ்ரிவால்’ இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

“விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவ, சில இடங்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சியினரால் எடுக்கப்பட்ட முன்முயற்சி” என்று ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.

தேவை அதிகரித்தால், இது போன்ற பல ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு : ’நேர்மையான நோக்கத்துடன் தீர்வு காண விரும்புகிறோம்’ – விவசாயிகள்

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் முகாமிட்டு போராடி வருகின்றனர். எதிர் கட்சிகளின் வலுவான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த சட்டங்கள் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது ஆம் ஆத்மி கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றன. இந்த மாதம் தொடக்கத்தில், அவர் போராட்ட தளங்களில் ஒன்றான சிங்கு எல்லையை பார்வையிட்டு அரசால் விவசாயிகளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்