கேரளாவில் ஊடரங்கின் போது யாரும் பசியுடன் இருக்க மாட்டார்கள், தேவைப்படுவோர்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவுகள் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க, இந்தியாவின் பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. அந்த வகையில் கேரளாவிலும் மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ”ஊடரங்கில் யாரும் பசியுடன் இருக்க மாட்டார்கள். அடுத்த வாரம் அனைத்து குடும்பங்களுக்கும் சிறப்பு பணியாளர்களுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.” என பதிவிட்டுள்ளார்.
Nobody will go hungry during the lockdown. Next week onwards free food kits will be distributed for all families and guest workers. Food will be delivered to the needy from People's Restaurants and Community Kitchens through Local Self Government Institutions.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 7, 2021
மேலும், “அரசின் உள்ளூர் பணியாளர்கள் மூலம் மக்கள் உணவகங்கள் மற்றும் சமூக சமையலறைகளில் இருந்து தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.