Aran Sei

திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டம்: உரிய முடிவு எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

பெண்களைப் போலவே திருநங்கைகளுக்கும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நேற்று (மே 7), ஊடகவியலாளர் இந்துஜா ரகுநாதன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஸ்டாலின் அவர்களே, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை திருநங்கையர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கொள்கிறேன். இது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.” என்று பதிவிட்டதுடன், முதல்வர் ஸ்டாலினையும் அந்த டிவீட்டில் இணைத்திருந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள் – முழுவிபரம்

இந்நிலையில், இன்று (மே 8), அவரின் டிவீட்டை மறுபகிர்வு செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், “மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனைக் கவனப்படுத்தியமைக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்