Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேரால் பிரான்ஸ் அதிபர் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்தி – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பிரான்ஸ்

Image Credits: DNA India

பெகசிஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி பிரான்ஸ்  அதிபர் இமானுவேல் மக்ரோன் வேவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாக, இதுகுறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் பிரஞ்ச் தொலைக்காட்சி டிஎஃப்1க்கு அளித்த நேர்காணலை மேற்கொள் காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், பெகசிஸ் ஸ்பைவேர் குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மக்ரோன் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை நிறுவனங்களில் வருமானவரி சோதனை: ‘ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் வெட்கக்கேடான முயற்சி’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வெளியான செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அவை தீவிரமானவை. ஊகடத்தில் வெளியான செய்திகள்குறித்து முழு கவனம் செலுத்தப்படும்… பாதிக்கப்பட்ட சிலர் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே விசாரணை தொடங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெகசிஸ் வேவு பார்த்தல் விவகாரம் தொடர்பாக கிரிமனல் வழக்கு பதிந்துள்ள மீடியாபார்ட் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் எட்வி பிளெல், “மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் வாடிக்கையாளரால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், அவரும் வேவு பார்க்க இலக்காக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்குத் தந்தது என்ன? – நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி

இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓவின் வாடிக்கையாளர்களால் வேவு பார்க்க அடையாளம் காணப்பட்ட நபர்களின் மாஸ்டர் பட்டியல் என நம்பப்படும் தரவுகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாபமற்ற ஊடக நிறுவனமான பர்பிட்டன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இணைந்து ஆய்வு செய்தது.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியிடத்திற்கான தேர்வு: தமிழ்நாட்டில் மையம் அமைக்க வைகோ கோரிக்கை

இந்த ஆய்வு முடிவுகள் லுமாண்டே, ஹாரெட்ஸ், தி வயர், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் உள்ளிட்ட உலகின் 17 ஊடக நிறுவனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்