Aran Sei

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை – மத்திய அரசு பாகுபாட்டை கடைபிடிப்பதாகக் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் போதிய தடுப்பூசிகள் இல்லாததால், வரும் மே 1 முதல்  மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க இயலாது என, அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களும், வரும் மே 1 முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாமென மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் நிலவுவதாகவும் அம்மாநில அரசுகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கூட்டணி அரசு உள்ள ஜார்கண்டிலும் இந்த சிக்கல் நிலவுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு

தடுப்பு மருந்து குறித்து, சீரம் நிறுவனத்திடம் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேட்ட போது ” மத்திய அரசு கொடுத்துள்ள ஆர்டர்களுக்கு தடுப்பூசி அளிக்கவே வரும் மே 15 வரை தேவைப்படும். எனவே உங்களுக்குத் தடுப்பூசி தர இயலாது ” என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கின்றது.

“என் கேள்வி என்னவென்றால், மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்க விரும்பினால், அதற்கான நடைமுறை என்ன? ராஜஸ்தானில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் 3.13 கோடி பேர் உள்ளனர்; நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி செலுத்துவது?” என்று ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு: மாற்றாந்தாய் மனப்போக்கை பாஜக வெளிப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பிர் சிங், “மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய தடுப்பூசிகள் எங்களிடம் இல்லை. நாங்கள் என்ன செய்வது? இந்த மொத்த நாடும் தவறாக வழிநடத்தப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பதன் வழியாக, களங்கம் ஏற்படுத்த முயல்கிறது” என்று கூறியுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, தடுப்பூசி பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர், “நாங்கள் தடுப்பூசி போட விரும்புகிறோம், ஆனால் அதற்கு நாங்கள் எங்கள் வீடுகளிலேயே தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, சாமானியர்கள் என்ன செய்வார்கள்” – பாஜக முன்னாள் எம்.பி ட்விட்டரில் கருத்து

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்தான ரெம்தேசிவர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை அளிப்பதில் மத்திய அரசு பாகுபாட்டைக் கடைபிடிப்பதாகவும் இந்த நான்கு மாநில அரசுகளும் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்