Aran Sei

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் நான்கு பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

இதற்கு உபயோகிக்கப்பட்ட வாகனமும், அத்தோடு பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

“மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகள் எதற்கு? மதம் உருவான போது, ஒலிப்பெருக்கி இருந்ததா? ஒலிப்பெருக்கிகளை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் ஒவ்வொரு மசூதியின் முன்பாகவும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் ஹனுமான் சாலிசா பாடுவார்கள்”என்று அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில் தெரிவித்திருந்தார்.

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

ராஜ் தாக்கரே கூறிய கருத்திற்கு சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் இது மஹாராஷ்டிரா சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் மாநிலம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் சட்டத்தின்படி அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார்” என்று சஞ்சய் ராவத் கூறியிருந்தார்ர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) காலை, சிவ சேனா பவனுக்கு வெளியே ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா உள்ளிட்ட இந்து மதப் பாடல்களை அனுமதியின்றி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் ஒலிக்கவிட்டிக்கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் நிர்வாகி யஷ்வந்த் கில்லேடர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் உறுப்பினர்கள் சிவாஜி பார்க் காவல் நிலைய வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோவிலில் கூடி   ‘ஹனுமான் சாலிசா’ மற்றும் பிற மதப் பாடல்களைப் பாடத் தொடங்கியுள்ளனர்.

Source: NDTV, PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்