Aran Sei

மணிப்பூரில் குக்கி பழங்குடி போராளிகள், சிறப்புப் படையினர் மோதல் – 4 போராளிகள் உயிரிழப்பு

ணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள போங்பால் குல்லன் கிராமத்தில் இருந்த பழங்குடி போராட்டக்காரர்களுக்கும், சிறப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இம்மோதலில் நான்கு குக்கி பழங்குடி போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று(அக்டோபர் 10), ஆயுதமேந்திய போராளிகள் சிலர் போங்பால் குல்லென் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 21 பரா சிறப்புப் படையில் உள்ள வீரர்கள் அக்கிராமத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்து கோயில்களுக்கு வழங்கும் நிதி சிறுபான்மையினர்களுக்கு செல்கிறது – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் குற்றச்சாட்டு

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இத்துப்பாக்கிச் சூடு முடிவடைந்தவுடன், நான்கு உடல்களுடன் துப்பாக்கிகள், பத்திரிக்கைகளை கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழந்த போராளிகள் குக்கி தேசிய விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த அமைப்பு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் பேச்சுவார்த்தைக்கும் வர மறுத்துள்ளது.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்