Aran Sei

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

மேற்கு வங்க தேர்தல் வாக்குபதிவின்போது, மத்திய ஆயுத காவல்படையான சிஐஎஸ்ஃப் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க சட்டபேரவைக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 29 ஆம் தேதிவரை, எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 10) 44 சட்டபேரவை தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

கொரோனாவை விரட்ட விமான நிலையத்தில் பூஜை: பாஜக அமைச்சர் தலைமையில் ஊழியர்கள் பங்கேற்பு

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) கூச் பெஹர் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாக்குபதிவின் போது, வாக்குசாவடிக்கு வெளியே மத்திய ஆயுத காவல் படையான சிஐஎஸ்ஃப் காவலர்களின் துப்பாக்கியை அப்பகுதி மக்கள் பறிக்க முயன்றதால் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்னனர்.

மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் குவிப்பு – தேர்தலை பாஜக போரைப் போல் கருதுவதாக திரிணாமுல் குற்றச்சாட்டு

இச்சம்பவம் தொடர்பாக பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, “சிதல்குச்சி பகுதியில் வாக்குபதிவு நடந்து கொண்டிருந்தபோது இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரனையின் படி, உள்ளூர்வாசிகள் சிலர் சிஐஎஸ்ஃப் காவலர்களை முற்றுகையிட்டதோடு, அவர்களின் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றுள்ளனர். அதைத் தொடர்ந்து சிஐஎஸ்ஃப் காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்