Aran Sei

உத்தரபிரதேசத்தில் பட்டியலின குடும்பத்தினர் படுகொலை – கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம் பெண்

த்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டதில் பட்டியல் வகுப்பைச் சாதியைச் சேந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயர் சாதியினரால் கொல்லப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 17 வயதுடைய பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரி என்ற கிராமத்தில் 50 வயது ஆண், அவருடை 45 வயது மனைவி, 17 வயதுடைய மகள் மற்றும் 10 வயதுடைய மகன், அவர்களுடைய வீட்டில் பிணமாக கண்ணெடுக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்கள் கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவர்க உடல் முழுவதும் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்று என்டிடிவி கூறுகிறது. கொல்லப்பட்ட 17 வயது பெண்ணின் உடல் மட்டும் வீட்டின் உள்புறத்தில் கிடந்ததாகவும் மற்றவர்களின் உடல் வெளிப்புறத்தில் கிடந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட குடும்பத்திற்கும் அந்த கிராமத்தை சேர்ந்த உயர் சாதியினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்ததாகவும், இதுகுறித்து கொல்லப்பட்ட குடும்பத்தினர் உயர் சாதியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் என்டிடிவி மற்றும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பிரச்னையில், புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், கொல்லப்பட்ட குடும்பத்தினரை சமாதானம் செய்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்