Aran Sei

பசு வதையைத் தடுக்காத காவல்துறையினர் – இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

த்தரபிரதேச மாநிலம்  பாட்டேபூர்  பகுதியில்  பசு வதைத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் காப்பாற்றியதாகக் கூறி நான்கு காவல்துறை அதிகாரிகளை அம்மாநில காவல்துறை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சிங், கிராமத்தினர் அளித்த புகார் மற்றும் வட்ட அலுவலர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள்  ஷமி அஷ்ரப்,  அனீஷ் குமார் சிங், தலைமைக் காவலர்  மனோஜ் குமார், காவலர்  ராஜேஷ் திவாரி ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பசுவதை தொடர்பாகக் குற்றம்சாட்டபட்டுள்ள ஹைதர் என்பவரை இந்த நால்வரும் காப்பாற்ற முயன்றனர் என்றும் , இந்தப் பசுவதை சம்பவம் கடந்த செப்டம்பர் 9 அன்று நடந்தேறியது  என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வட்ட அலுவலர் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை எனக் கண்டறியப்பட்ட நிலையில் காவல்துறை அதிகாரிகள் நால்வரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Source:THE NEW INDIAN EXPRESS

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்