Aran Sei

அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா

Image Credits: Britannica

பாபர் மசூதிக்குப் பதிலாகக் கட்டப்படும் மசூதியின் வரைபடம் இந்தச் சனிக்கிழமையன்று (டிசம்பர் 19-ம் தேதி) வெளியிடப்படும் என்று அதன் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

”அயோத்தி மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக 2021-ம் ஆண்டு, ஜனவரி 26-ம் தேதியை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இதே நாளில் நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததால் இந்த நாளை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது.  நம் அரசியலமைப்பு பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது, இதுவே நம் மசூதி திட்டத்தின் முக்கிய அம்சமாகும்” என்று இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் கூறியுள்ளார்.

மசூதியைக் கட்டுவதற்காக ஆறு மாதங்களுக்கு முன் சன்னி வக்ஃப் வாரியத்தால் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

மசூதி வளாகத்துக்குள், பல்நோக்கு மருத்துவமனை, சமூக சமையலறை மற்றும் ஒரு நூலகம் ஆகியவை அமைய உள்ளன. இதற்கான திட்டங்கள் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. திட்டத்தைத் தலைமை கட்டிடக் கலைஞரும் பேராசிரியருமான எஸ்.எம்.அக்தர் இறுதி செய்துள்ளார்.

“இந்த மசூதி ஒரே நேரத்தில் 2,000 பேரை வழிபடுவதற்கான வசதிகளை கொண்டதாக இருக்கும், அதன் அமைப்பு வட்ட வடிவத்தில் இருக்கும்” என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்கு மாற்றாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு “முக்கிய” இடத்தில் ஒரு புதிய மசூதியைக் கட்ட சன்னி வக்ஃப் வாரியத்திற்கு வேறு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்