Aran Sei

மகளிர் தினத்தில் ஒன்றிணையும் 40,000 பெண்கள்:   விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி நோக்கி பேரணி

ர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னிட்டு, பஞ்சாப் மாநிலத்திலிருந்து சுமார் 40,000 பெண்கள், டெல்லி மோர்சாவில் (டெல்லி பேரணியில்) இணைய உள்ளனர் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மேலும், அவர்களில் பெரும்பாலானோர் இன்று (மார்ச் 7) காலை தங்கள் கிராமங்களில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் பெண்களைப் பெருமளவில் அணித்திரட்டும் பொருட்டு, பஞ்சாபின் பெரும்பாலான மாவட்டங்களில் டிராக்டர் பேரணிகளை நடைபெறுகின்றன என்றும் அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 

‘எங்களை மிரட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது’ – டைம் இதழ் அட்டையில் கர்ஜிக்கும் விவசாய பெண்கள்

பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற அணித்திரட்டலுக்கான டிராக்டர் பேரணியில், பெரும்பாலான டிராக்டர்களை பெண்களே இயக்கியதாகவும், பதிந்தா மாவட்ட டிராக்டர் பேரணியில், ஆண், பெண் இருபாலரும் சமவிகிதத்தில் டிராக்டர்களை இயக்கியதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், “தங்கள் குழந்தைகளின் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறுவது காரணமாக ஏராளமான பெண்கள் அதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். எனவே அவர்களில் பலர், மார்ச் 9 ஆம் தேதி அவர்களின் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். சிலர் மட்டுமே போராட்டக்களம் திரும்பி வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை மான்சா மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் டெல்லியை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.” என்று பாரதிய கிசான் யூனியனின் மகளிர் பிரிவின் மாநிலக் குழு உறுப்பினர் பல்பீர் கவுர் கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி – ஆவணங்களை தந்தையிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் சங்கங்களிலேயே மிகப்பெரிய அளவிலான பெண்கள் பிரிவைக் கொண்ட அமைப்பான பாரதிய கிசான் யூனியனின் உக்ரஹான் கிளையின் பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கோக்ரிகலன், “ஞாயிற்றுக்கிழமை காலை 500 பேருந்துகள், 600 சிற்றுந்துகள், 115 லாரிகள் / கன்டைனர்கள் மற்றும் 200 சிறியரக வாகனங்களில் பெண்கள் புறப்படுகிறார்கள். பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான பெண்கள் டெல்லி திக்ரி எல்லையை நிரப்புவார்கள்.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

பாரதிய கிசான் யூனியனின் டக்கௌண்டா கிளையின் பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங், “எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் குழு மேடைக்கு அருகில் இருக்கும். ஆனால், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்போவது பெண்கள்தான்.” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்