Aran Sei

‘இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்’ – விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா

த்தரப் பிரதேச விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளதால், அம்மாநிலத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) முன்னாள் தலைவர் பிரவின் தொகாடியா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலின் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

நேற்று (பிப்ரவரி 2), மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பிரவின் தொகாடியா, “வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டிற்காகவும் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்திற்காகவும் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

உக்ரைனில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் இறப்பிற்கு நீட் தேர்வே காரணம்: எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு

இவை இரண்டையும் ஒன்றியத்தில் உள்ள பாஜக தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களைப் பற்றி பேசியபோது, “இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அம்மாணவர்களை ஒன்றிய அரசு திரும்பக் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மாணவர் உயிரிழந்தது துர்வாய்ப்பானது என்று பிரவின் தொகாடியா, “நம் நாட்டில் வெறும் 45,000 அரசுத் தரப்பு மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. மருத்துவ படிப்புகளுக்கான செலவு அதிகம். இதன் காரணமாக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கின்றனர்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 1

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்