Aran Sei

உ.பி. முதலமைச்சரை விமர்சித்த முன்னாள் ஆளுநர் – தேசதுரோக வழக்குப் பதிந்த காவல்துறை

த்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை  விமர்சித்த  அம்மாநில  முன்னாள் ஆளுநர் ஆசிஸ் குரேஷி  மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், 2௦14 – 2௦15 வரை மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றியவருமான  ஆசிஸ் குரேஷி,  யோகி ஆதித்யநாத்தை “ரத்தம் குடிக்கும் சாத்தான்” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து  பாஜகவைச் சார்ந்த ஆகாஷ் குமார் சக்சேனா  அவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சக்சேனாவின் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு   153A, 153B, 124A, 505(1)(B) கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிஸ் குரேஷி மீது சட்டப்படி நடவடிக்கை என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

source:  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்