Aran Sei

‘வெறுப்பு, பிரிவினைவாத அரசியலால் பாஜகவில் இருந்து விலகினேன்’ -முன்னாள் ஒன்றிய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

வெறுப்பு, பிரிவினைவாத அரசியலால் தான் நான் பாஜகவில் இருந்து வெளியேறினேன். அத்தகைய அரசியலுடன் சமரசம் செய்து கொண்டு என்னால் தொடர்ந்து அங்குப் பயணிக்க முடியவில்லை” என்று பாஜகவில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

’பிரிவினைவாத சக்திகளுக்கு அடிபணியமாட்டோம்’: வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக பாடல் வெளியிட்ட வங்காள கலைஞர்கள்

2021 செப்டம்பர் மாதம் பாஜகவில் இருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய பாபுல் சுப்ரியோ, பாலிகஞ்ச் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாபுல் சுப்ரியோ ஒன்றிய அமைச்சர் பதவியை இழந்த சிறிது நேரத்திலேயே பாஜகவில் இருந்து விலகினார்.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

நேற்று (மார்ச் 18), இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பு, பிரிவினைவாத அரசியலால் தான் நான் பாஜகவில் இருந்து வெளியேறினேன். அத்தகைய அரசியலுடன் சமரசம் செய்து கொண்டு என்னால் தொடர்ந்து அங்குப் பயணிக்க முடியவில்லை” என்று பாபுல் சுப்ரியோ கூறியுள்ளார்.

மேலும், “மேற்கு வங்கத்தின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பேன். நான் மேற்கு வங்கத்தில் 70:30 அல்லது 80:20 விழுக்காடு மக்களுக்கான தேர்தல் என்ற மதவெறி அரசியலை ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்